jump to navigation

“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ் ஜனவரி 19, 2009

Posted by Personal Web Mate in உலகம், நடப்பு.
Tags: , ,
add a comment

George Bush at Farewellஅமெரிக்கர்கள் ஜார்ஜ் புஸ்ஸை “புஸ்” செய்யத் தயாராகும் நேரத்தில், புஷ் ஒரு சரித்திர அறிக்கை வெளியிட்டுள்ளார். அது அவர் கூறியிருப்பது, தன்னுடைய அனுகுமுறைகள் பிரபலமாக பேசப்படாவிட்டாலும், நாட்டுக்கு தன்னுடைய அனுகுமுறைகளால் வந்திருப்பது நல்லது தானாம். இதை அவர் இப்படி கூறுகிறார், “அமெரிக்க கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் எந்த திவிரவாத தாக்குதலும் இல்லாமல் இருக்கிறது”. தன்னுடைய பிரிவு உபச்சார விழாவில் செப்டம்பர் 9/11 திவரவாத தாக்குதலை நினைவுப்படுத்தி பேசிய புஷ், வருடங்கள் போகப் போக, அமெரிக்கர்கள் 9/ 11 தாக்குதலுக்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால் நான் இன்னமும் திரும்பவில்லை என தன்னுடைய உணர்வுகளை கொட்டி தீர்த்துள்ளார்.

புஷ் பற்றி அடுத்து ‘நச்’ தகவல், முன்னால் அமெரிக்க பிரதமர், ஜார்ஜ் நிக்சனை அடுத்து,  அதிக அதிருப்தியும், அங்கிகாரமும் பெறாதவர் என்ற பட்டத்துடன் வெளியேறுகிறார்.  ”நிங்கள் நான் எடுத்திருக்கும் தீர்மானங்களை ஏற்க்காமல் இருக்கலாம், ஆனால் நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளர்.  தனக்கு  கொடுக்கப்பட்டிருந்த 13 நிமிடங்களை நன்றாக பயன்படுத்தி தன் செயல்களுக்கு சாக்கு சொல்லப் பார்திருக்கிறார். இனி புஷ்ஷின் அடுத்த பேச்சு புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாளை பதவியேற்ப்பு விழாவில்.  “எனக்கு முன் பதவியில் இருந்த அனைவரையும் போல எனக்கும் சில காரியங்கள் சரியாக நடக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இப்போது காரியங்களை வித்தியாசமாக செய்வேன். நான் என்ன செய்திருக்கிறேனோ அது என்னுடைய மனசாட்சிக்கு சரியன பட்டவை”.  இப்படி பேசிவிட்டு மேடையில் இருந்து வந்தார் புஷ். பார்பரா அவரின் மகள், கண்களில் வழிந்த கண்ணீரை இருக் கரங்களாலும் துடைத்துக் கொண்டார்.

george-bush_farewellபுஷ்ஷின் ஆட்சி பயங்கரமான திவிரவாத தாக்குதலில் தொடங்கி, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் முடிய உள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் தொடுத்த போரினால் முன்பு எப்போதும் இல்லாத அளவு “திவிரவாத அமைப்புகள்” வளர்ந்துள்ளன. உலகில் திவிரவாத சக்திகளால் நிகழும் அட்டுழியங்கள் அப்பாவி மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது என்னது? பண்டிகை விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருப்போர் நிம்மதியாக வீடு  விரும்பும் போது அசம்பாவிதம் எதும் நடந்துவிடுமோ என்ற பயம் தான் முஞ்சுகிறது! 20 வருடங்களுக்கு முன்பு இது போல் இருந்தா? பாக்கிஸ்த்தான் விஷயத்திலும் இந்திய கவனமாக செயல்பட வேண்டும். அவசரத்தில் அமெரிக்கவைப் போல, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, பகையை மேலும் சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்!

நன்றி! புஷ் அவர்களே! திவரவாதத்தின் மீது நீங்கள் தொடுத்த போரின் விளைவை இந்த மனுக்குலம் என்றும் மறக்காது!  விடைப் பெறுகிறேன்!

பேசு இந்தியா பேசு! தங்கிலீஷ்! ஜனவரி 15, 2009

Posted by Personal Web Mate in நடப்பு, மொழி, விவாதம்.
Tags: , , ,
add a comment

languageஷிங்கிலீஷ், பெங்குலீஷ், பஞ்சலீஷ் மற்றும் தமிலீஷ் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். எல்லோரும் தங்கள் தாய்மொழியுடன் ஆங்கிலத்தை சராமரியாக கலந்து பேசுகின்றனர்.

இந்தியர்கள் தங்கள் தாய் மொழியை அடுத்து ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர் என நான் கூறினால் அது மிகப் பெரிய வேடிக்கையாகி விடும்! தாய் மொழியில் பேச வாயேடுத்தாலும் இடைஇடையே தங்களையும் அறியாமல் ஆங்கில வார்த்தைகளை அடுக்கடுக்காய் பேசுகின்றனர்.ஒரு பக்கம், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தாலும், ஆங்கிலம் எப்படி, எங்கேல்லாம், எவர்களிடம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.

இந்தியாவில் சுமால் இரநூறுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மொழி பேசப்பட்டு வருகிறது. இதில் உலகமயமாக்கலால் இடையில் ஆங்கிலம் உலகேங்கும் புதிய கட்டாய மொழியாக புகுத்தப்படுகிறது. தாய் மொழியில் பேசும் போதும் கூட ஆங்கில வார்ததைகள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்வதால், இந்திய மொழிகள் நாளடைவில் மறைய வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. இது பழைய ஐயம்.ஆனால் இப்போது புதிய பிரச்சனை கிளம்பிள்ளது.

இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை (11/01/09) அன்று டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) நாளிதழில் “ஆங்கிலம் கலந்த இந்திய மொழிகள்” பற்றிய ஒரு அதிரடியான செய்திப்பக்கம். அதில் ஆங்கிலத்தால் இந்தியாவில் தற்ப்போது நடக்கின்ற மொழி மாற்றங்கள் பற்றி மிக சிறப்பாக கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. அதின் இரத்தின சுருக்கம் இங்கே. முதலில் ஆங்கிலம் கலந்த ஷிந்தியால் நடப்பது:

பாலிவூட், தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், தெருவில் என ஆங்கில கலப்பை எங்கும்
பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்க்கு சினிமா பாடல்களில் வரும் ஆங்கில வார்தைகள். வானொலிகளில் -  Radio மிர்ச்சி செம hot.

“இந்தி, ஆங்கிலம், தமிழ் – இம்முன்று மொழிகளும் தொடர்ப்புடையன. நிறைய தமிழ் படங்கள் ஷிந்தியை பயன்படுத்துகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் பாலிவூட். ஷிந்தி மக்களை சென்றடையவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றியிருக்கிறது” – ஜி.ஜே.வி பிரசாத், பேரசிரியர் ஆங்கில படிப்பு பிரிவு,  ஜவர்கலால் நேரு பல்கழைக் கழகம்.

சரி! அப்போது தெற்க்கு, வடக்கு மொழி வேறுப்பாட்டை ஷிங்குலீஷ் (ஷிந்தி + ஆங்கிலம்) நீக்கி, பேச்சு வழக்கில் ஆதிக்கம் செலுத்துகிறதா? இந்த கேள்விதான், முதுரா இன்ஷ்டிடுயுட் ஆப் கம்யூனிக்கேஷன் (Mudra Institute of Communication), மும்பையில் நடத்திய உலகளாவிய கருத்தரங்கில் விவாதிக்ப்பட்டது. “ஷிங்குலீஸ் கொஞ்ச காலமாகவே பேசப்பட்டு வருகிறது. முழுதாக ஆங்கிலமோ அல்லது இந்தி தெரியாதவர்கள் தான் அதை அதிகம் பயன்படுத்துகின்றனர் என ஒதுக்கிவிடலாம். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஏகாத்திபத்தியம் நடத்திய காலத்தின் ஆங்கில மொழி ஆதிக்கத்திலிருந்து நம்மை வெளியே இழுத்து, துணை மொழியாக உருவேடுத்து வருகிறது” இப்படி கூறுபவர் ரீட்டா கோத்தாரி , துணை பேராசிரியர், MICA.

முன்னுற்று ஐம்பது மில்லியன் ஷிங்குலீஸ் பேசுபவர்கள், ஆங்கில மொழியை தங்கள் தாய் மொழியாக பேசி வருபவர்களை மிஞ்சி விடுவார்கள் என டேவிட் கிறிஸ்டல், மொழி ஆய்வாளர் கணித்துள்ளார். வளர்த்து வரும் ஷிங்குலீஸ்க்கு என்ன காரணம்?

விளம்பர உலகை எவ்வாறு பாதித்து உள்ளது? முன்னோடி விளம்பர குரு, பாரத் தாபேஸ்கர் கூறுகையில், இந்தியாவில், ஆங்கிலம் மக்களை உசுப்பக் கூடியது. இந்திய மொழிகள் எண்ணங்களை அசைக்க கூடியது என்றார்.

மேலே உள்ளது போல ஷிங்குலிஷ்க்கு வாக்காளத்து வாங்குகின்றனர். சரி இதுபோக ஷிங்குலீஷால் வரும் பாதகங்களை தனியாக ஒரு கட்டுரையாக எழுதி இருந்தனர். ஷிந்தி கலந்த ஆங்கிலத்தை வெளி உலகத்தாரிடம் பேசினால் அவர்களுக்கு புரியப் போவதில்லை. எனவே இப்போதைக்கு பிழைக்க வேண்டுமானால் ஷிந்தி கலக்காத சுத்த ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என முடித்துக் கொண்டனர்.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழி ஷிந்தி என்றாலும், இது தமிழுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் அதிகம்பேர் ஆங்கில வார்ததைகளை, பேசும் போது சராமரியாக போட்டு வேசுவர்கள். தமிழ் வார்த்தைகள் நிறைந்த ஆங்கிலம் (தங்கிலிஷ்) இன்னமும் ஷிங்குலிஷ’ போல புதிய ஆங்கில + ஷிந்தி வார்த்தைகள் அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், தமிழில் ஆங்கில கலப்பு அபயகரமானது. தமிழ் வேறு, ஆங்கிலம் வேறு. இந்த இரண்டு மொழிகளையும் கல்ககாமல் தனித்தனியே பேசுவதே தமிழுக்கு நல்லது. அப்படி செய்தால் பல பல தலைமுறைகளுக்கு தமிழனிடம் தமிழன்  பேசுவதற்க்கு சிதையாமல் தமிழும்,  வெளி உலகில் உள்ள பிற மனித இனத்துடன் பேச ஆங்கிலமும் தமிழனுக்கு தெரியும்.

அளவைக் குறைத்து விலையை உயர்த்தும் நிறுவனங்கள்! December 1, 2008

Posted by Personal Web Mate in நடப்பு, விவாதம்.
Tags: ,
2 comments

பொதுவாக விலை உயர்வு இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் காய்கறிகள் உயரும் போது மட்டும் தான் மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும். ஆனால் அமைதியாக சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் அளவைக் குறைத்து விலையை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுனிலிவர் நிறுவனத்தின் “ப்யர்ஸ்” (Pears) குளியல் சோப்யை வாங்கினேன். சில வாரங்களுக்கு முன்பு வரை எழுபத்தி ஐந்து கிராம் ப்யர்ஸ் சோப்பு வெறும் ரூ. 23  தான். ஆனால் இப்போதைய விலை ரூ.25, ஆனால் எடை எழுபத்தி ஒன்று மட்டுமே. நான்கு கிராம் குறைவு ஆனால் விலை மட்டும் இரண்டு ரூபாய் கூட. இதே போன்று பிரபலமாக விற்பனையாகும் இரண்டு ரூபாய் சர்ப் எக்சலின் (Surf Excel) அளவு குறைக்ப்பட்டுள்ளது. பதினேழு கிராமிலிருந்து பதினான்கு கிராமிற்க்கு குறைக்கப் பட்டுள்ளது. ஆனால் விலை அதே தான்.

இப்படி அமைதியாக மக்களை “ஏக்கிறார்கள்”. நாமும் இதைப் பற்றி யோசிப்பது கூட இல்லையே! எதற்க்காக இதை இங்கு கூற விரும்புகிறேனேன்றால், வளரும் நாடுகளான மூன்றாம் தர நாடுகளில் பெரும் நிறுவனங்கள் விலைக் குறைத்து பொருளின் தரத்தையும் குறைத்து விடுகின்றனர். சில நேரங்களில் இது போன்ற மலிவு பொருட்களால் தீமைகள் தான் வருகிறது. இதற்க்கு தக்க உதாரணம், சில வருடங்களுக்கு முன்பு கோல நிறுவன பானத்தில் புச்சி மருந்நு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்து.

அளவைக் குறைத்து விலை ஏற்று நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டாமா? ஒவ்வொரு சோப்பிலும் நான்கு கிராமை குறைத்து இரண்டு ரூபாயை ஏற்றினால் அந்த நிறுவனத்திற்க்கு எவ்வளவு லாபம்? ஆனால் மக்களுக்கு இழப்பு தானே?

Follow

Get every new post delivered to your Inbox.