jump to navigation

இலங்கை தமிழர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஒக்ரோபர் 31, 2008

Posted by Personal Web Mate in இனம், உலகம், நடப்பு, விவாதம்.
Tags: , ,
5 comments

”இலங்கை தமிழர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை” – இது தான் தமிழ்ர் அல்லாத பிற இந்திய மாநிலத்தவர் கூறுவது! வட மாநிலங்களில் பிரபல செய்தி தொலைக் காட்சி ஊடகங்களும், இலங்கையில் நடக்கும் தமிழ் இனக் கொலைப் பற்றி செய்திகளை தொகுத்து வழங்குவதில்லை. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப் படுவதை எதிர்த்து, தமிழகத்தில் மனிதச் சங்கிலி ஏற்படுத்தி, ஏதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், இச் செய்தி வட மாநில ஊடகங்களில் துளிக் கூட வரவில்லை. என்னடா இது? என யோசித்து கொண்டிருந்தேன்.

கடந்த வாரத்தில் என நினைக்கிறேன். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். நாளிதழின் முகப்பு பக்கம், ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டிருந்தது. அது –

இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் ஈடுப்பட வேண்டுமா? 

முடிவுகள்: 74 % கூடாது என்றும், வெறும் 23 % செய்ய வேண்டும் என்றும், 3%  தெரியதென்றும் இருந்தன.

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைக் கானும் இந்தியா என்பதா? என்னற்ற  வலைப் பதிவாளர்களும் இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப் படுவதை எதிர்த்து தங்கள் குரல்களை ஓலித்துக் கொண்டிருக்க, இவர்கள் குறைந்த பட்சம், வட நாட்டவர், தென் நாட்டவர் என்ற பேதங்களை மறந்து,  தங்கள் ஆதரவையாவது தெரியப்படுத்தலாம் இல்லையா? சரி இதோ nihr வலைப்பூவில் ஓர் கருத்துக் கணிப்பு:

Advertisements

குறைந்த செலவில் தயாரான சந்திரேயன் 1 ஒக்ரோபர் 29, 2008

Posted by Personal Web Mate in நடப்பு.
Tags: ,
add a comment

 

Chandrayaan 1

Chandrayaan 1

இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழகம் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி முற்றிலும் இந்தியாவில் தையாரிக்கப் பட்ட ரயக்கெட்டையும், வின்கழத்தையும்(சாட்டிலைட்) விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனைப் படைத்தது.

இதற்க்காக ISRO செலவு செய்தது ரூ. 380 கோடி மட்டுமே! இது ISROவின் ஆண்டு பட்ஜட்டில் 4% மட்டுமே. இதற்கிடயில் ‘சந்திரனுக்கு விண்கழத்தை அனுப்பி என்ன செய்யப் போகிறது இந்தியா?’ என பல கேள்விகள். சந்திரேயனை மிகக் குறைந்த செலவில் தயாரித்து அனுப்பியதற்கு ISRO வை பாராட்ட மட்டுமே வேண்டும். சந்திரனுக்கு வேட்டியாக வின்கழத்தை அனுப்பவில்லை இந்தியா. எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சந்திரனில் ஷிலியம்  வாயு நிறைய இருக்கிறது. இந்த ஷிலியம் எதிர்கலத்தில், பேட்ரோல் போல் பயன்படப் போகிறது. எனவே தான் சந்திரேயனை செலுத்தி சந்திரனில் இருக்கும் ஷிலியத்தை பற்றி ஆய்வு செய்யப் போகிறது இந்தியா. நல்ல விஷயம் தானே? கொஞ்சம் சிரியுங்களேன்!

இணையத்தில் சூரையாடப்படும் தனி நபர் விவரங்கள் ஒக்ரோபர் 26, 2008

Posted by Personal Web Mate in இணையம், குறு உதவி.
Tags: ,
add a comment

Privacy

இன்றைய இளம் தலைமுறையினர், பெரும் புள்ளிகள் போல வாழ ஆசைப்படுகின்றனர். இளசுகளைக் கவரும் வகையில், இனையப் பயன்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, 24 மணி நேரமும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உலகிற்கு காட்ட, கேமிரா மூலம் தங்களை ஒளிப்பரப்பு செய்ய நிறைய தளங்கள் உள்ளன. இது ஏதோ நம்புவதற்கு கடினமாகத் தோன்றலாம், ஆனால் முற்றிலும் உண்மை. இளசுகளே பெரும்பாலும் இணையத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

இணையத்தில் நடக்கும் செயல்கள், இந்த தலைமுறையில் தான் முதன் முதலில் நடக்கிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில், கல்லூரிகளில் பிரிந்த நண்பர்கள், ஒன்று கூடுவது என்பது அசாதர்னமான செயல், ஆனால் இப்போதோ, இது எளிய செயல். இதற்கு காரணம்ஈ வளர்ந்து வரும் சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களே. செய்தி தாள்களிலும், பிற ஊடகங்களிலும் இது போன்ற தளங்களில் நடக்கும் குற்றங்களை பற்றி எழுதிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த குற்றங்கள் எவ்வாறு தடக்கின்றன?

சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களைப் பயன்படுத்துவோர், தங்களுக்கு மிகவும் சொந்தமான தகவல்களை வெளியிடுகின்றனர். இணையத்தில் உலாவ வரும் எவரும் இந்த தகவல்களை பார்க்கலாம். இந்த தனி நபர் தகவல்கள் தவறான கைகளுக்கு கிடைக்கும்போதுதான் பிரச்சனையே. கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கலை வைத்து ஆள் மாறாட்டம் செய்வது, தனிப்பட்ட நபரின் தகவல்கலை சேகரித்து விற்றுவிடுவது, தகவல்களை வேறு தளங்களில் இடுவது போன்றவை நடக்கிறது. எனவே இணையத்தில் சொந்த தகவல்களை வெளியிடும் போது கவனம் தேவை. சொந்த புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.