jump to navigation

செல்போனை துலைத்த கதை நவம்பர் 25, 2008

Posted by Personal Web Mate in நடப்பு.
Tags: , ,
1 comment so far

 apple-iphone“அரசியல்ல இதேல்லாம் சகஜம்ப்பா” என்ற சினிமா வசனம் பலருக்கும் தெரியும். ஆனால் அநியாயத்திற்க்கு சில விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கிறது. சில வரங்களுக்கு முன்பு பணியிடத்தில் செல்போனை துலைத்தேன். பொருளை இழந்த துயரத்தைவிட ஒரு பெரும் துயரம் காத்திருந்தது. செல்லை எடுத்தவன் செல்போனில் உள்ள சிம் கார்டை கழற்றி எறிந்து விடுவான். அது யார் கைக்கு கிடைக்குமென்று யார்க்கு தெரியும்? எடுத்தவன் துஸ்பிரயோகம் செய்தால் ‘மாட்டுவது’ நானாக தான் இருப்பேன் இல்லையா? பிரச்சனை வராமல் இருக்க காவல் நிலையத்திற்க்கு சென்று FIR பதிவு செய்துவிட்டு வந்தேன். காவலர்களிடம் இருந்து அந்த கால் பக்க காகிதத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அடுத்து எனது செல்போன் நிறுவன வாடிக்கையாளர் மையத்திற்க்கு அழைத்து, கார்டை துலைத்த விபரத்தை கூறினேன். கூறிய உடன் ஒரு மனிதாபிமானத்திற்க்கு “ரொம்ப வருந்துகிறோம்” என்றனர். கார்டையை நிறந்தரமாக நிறுத்த வேண்டுமேன்றேன். அதற்க்கு, அந்த நிறுவன சேவை மையத்திற்க்கு செல்ல வேண்டும் என்றனர். நான் வாசிக்கும் இடத்திலிருந்து அருகிலுள்ள நிறுவன சேவை மையம் சுமார் நூறு கிலோ மீட்டர் துரம். “சரி” என்று போனை துண்டித்தேன். ஒரு வாரத்திற்க்கு பிறகு மீண்டும் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டேன். என்னிடம் பேசிய பெண், உங்கள் எண்ணையும், பெயரையும் கூறுங்கள் என்றார். கூறினேன். அவர் கூறிய பதில் என்னை அதிர வைத்தது. “மன்னிக்கவும். இந்த எண் உங்கள் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. வேறு பெயரில் உள்ளது”  “ஐயோ இதேன்ன கொடுமை?” எதோ ‘கோல்மால்’ நடந்திருப்பது தெரியவந்தது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களை அழைத்தேன். பெயர் மாற்றம் எப்படி நடந்தது என்று கேட்டேன்.

“நிங்கள் என்ன டாக்குமென்டை (ஐ.டி ப்ருப்) சமர்ப்பித்தீர்கள்?” 

“என்னுடைய …”

“மன்னிக்கவும். அது எற்றுக் கொள்ளப் படதக்கதல்ல! கார்டை ஏங்கிருந்து வாங்கினீர்கள்?”

“ஆனால் கார்டை மூன்று மாதங்களாக பயன்படுத்தியிருக்றேன். உங்கள் நிறுவனத்தில் இருந்து மாற்று ஐ.டி சான்று கேட்கவே இல்லையே? ஏன்?”

“கார்டை ஏங்கிருந்து வாங்கினீர்கள்?”

“என்னுடைய …”

உங்கள் கார்டுக்கு தேவையான சான்றில்லாததால் நீங்கள் கார்டை வாங்கிய கடைக்கரர் வேறோருவரவது சான்றை பயன்படுத்திருக்கலாம். அதனால்தான் வேறு பெயரில் உள்ளது”

இதைப்பற்றி நன்றாக கேள்விப்பட்டது போல் கூறினார். என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. சான்று செல்லாதெனில் என்னை அழைத்து கூறாமல், இப்படி செய்யலாமா? வேருயாரவது சான்றை எனக்கு பயன்படுத்தினால், என் சான்றை யாருக்கு பயன்படுத்தி இருப்பார்களே என பீதி கிளம்புகிறது. புது மொபைல் தொடர்ப்பை பெற கடைக்காரரிடம் சான்றை கொடுப்பதற்க்கு பயமா இருக்கு. இதையல்லாம் எப்படி சகஜமா எடுத்துக்கிட்டு தொழில் பன்னுறாங்களோ தெரியல!

Advertisements

பிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம் நவம்பர் 7, 2008

Posted by Personal Web Mate in சினிமா, நடப்பு.
Tags: , , ,
1 comment so far
Michael Crichton

Michael Crichton

வெற்றி ஆசிரியரான மைக்கேல் கிரேட்டனின் (Michael Crichton) நாவல்கள் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியன.  மருத்துவராக தன் பணியைத் தொடங்கிய இவர், அறிவியல்,தொழில் நுட்பத்தை சார்ந்த நாவல்களை எழுதி புகலின் உச்சிக்கே சென்றுவிட்டார் எனலாம். இவரது படைப்புகளில் சில ஷாலியுட் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு சக்கைப் போடு போட்டன. ஜிராஸிக் பார்க் (Jurassic Park)  மற்றும் லாஸ்ட்டு வேல்டு (The lost world) படத்தைப் பற்றி கேள்விபடாதோர் இருக்க முடியாது. இப்படம் இந்த ஆசிரியார் எழுதிய நாவலிருந்து எடுக்கப்பட்டது. இவரின் அதிரடியான பிற நாவல்களும் அவற்றை அடிப்படையாக வந்த படங்களும்:  The Andromeda Strain, Congo, Disclosure, Rising Sun, Timeline, State of Fear, Prey, and Next. இவரது புத்தகங்கள் 150 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று திர்ந்து விட்டன. 

கேன்சர் நோய் தாக்கி, லாஸ்ஏஞ்சல்சில், நவம்பர் 4, 2008 யில் மரணடந்தார். இவரது படைப்புகள் அழிய வரம் பெற்றுவிட்டன. nihr வலைப்பூ மைக்கேல் கிரேட்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

புதிய nihr இடுகைகளை உங்கள் செல்பேசியில் வாசிக்கலாம் நவம்பர் 7, 2008

Posted by Personal Web Mate in வாசிப்போர் கவனத்திற்க்கு.
Tags: , ,
add a comment

இனி உங்கள் மொபையில் போனில் nihr வலைப்பூவின் புதிய இடுகைகளை வாசிக்கலாம்.  இந்த இலவச சேவையைப் பெற கூகுள் எஸ்.எஸ்.எம்ஸ் சேனல் தளத்திற்கு சென்று உங்கள் கூகுள் பயனாளர் கணக்கை பயன்படுத்தி உட்புகவும். முதன் முதலில் இந்த சேவையை பயன்படுத்துவோர் தங்கள் மொபையில் எண்னை கொடுத்து பதிசெய்ய வேண்டும். மொபையில் எண்னை சரிப் பார்த்த பின்பு, புதிய இடுகைகள் எப்போதேல்லாம் nihr வலைப்பூவில் இடப்படுகிறதோ அப்போதெல்லாம்  உங்கள் மொபையிலுக்கு, புதிய பதிவின் தலைப்பு மற்றும் குறு பத்தி அடங்கிய ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். மொபைலில் ஜிப்பியாரஸ் (GPRS) சேவை இருக்கும் என்றால், புதிய பதிவுன் தொடுப்பு இனைய முகவரியைக் சொடுக்கி. மொபையில் போன் ப்ரவுசரில் முலம் முழு வலைப்பதிவையும் வாசிக்கலாம்! இந்த சேவையைப் பெற இப்போதே இங்கு செல்லலாம்: http://labs.google.co.in/smschannels/subscribe/NewsIHeardandRead