jump to navigation

“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ் ஜனவரி 19, 2009

Posted by Personal Web Mate in உலகம், நடப்பு.
Tags: , ,
trackback

George Bush at Farewellஅமெரிக்கர்கள் ஜார்ஜ் புஸ்ஸை “புஸ்” செய்யத் தயாராகும் நேரத்தில், புஷ் ஒரு சரித்திர அறிக்கை வெளியிட்டுள்ளார். அது அவர் கூறியிருப்பது, தன்னுடைய அனுகுமுறைகள் பிரபலமாக பேசப்படாவிட்டாலும், நாட்டுக்கு தன்னுடைய அனுகுமுறைகளால் வந்திருப்பது நல்லது தானாம். இதை அவர் இப்படி கூறுகிறார், “அமெரிக்க கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் எந்த திவிரவாத தாக்குதலும் இல்லாமல் இருக்கிறது”. தன்னுடைய பிரிவு உபச்சார விழாவில் செப்டம்பர் 9/11 திவரவாத தாக்குதலை நினைவுப்படுத்தி பேசிய புஷ், வருடங்கள் போகப் போக, அமெரிக்கர்கள் 9/ 11 தாக்குதலுக்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால் நான் இன்னமும் திரும்பவில்லை என தன்னுடைய உணர்வுகளை கொட்டி தீர்த்துள்ளார்.

புஷ் பற்றி அடுத்து ‘நச்’ தகவல், முன்னால் அமெரிக்க பிரதமர், ஜார்ஜ் நிக்சனை அடுத்து,  அதிக அதிருப்தியும், அங்கிகாரமும் பெறாதவர் என்ற பட்டத்துடன் வெளியேறுகிறார்.  “நிங்கள் நான் எடுத்திருக்கும் தீர்மானங்களை ஏற்க்காமல் இருக்கலாம், ஆனால் நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளர்.  தனக்கு  கொடுக்கப்பட்டிருந்த 13 நிமிடங்களை நன்றாக பயன்படுத்தி தன் செயல்களுக்கு சாக்கு சொல்லப் பார்திருக்கிறார். இனி புஷ்ஷின் அடுத்த பேச்சு புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாளை பதவியேற்ப்பு விழாவில்.  “எனக்கு முன் பதவியில் இருந்த அனைவரையும் போல எனக்கும் சில காரியங்கள் சரியாக நடக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இப்போது காரியங்களை வித்தியாசமாக செய்வேன். நான் என்ன செய்திருக்கிறேனோ அது என்னுடைய மனசாட்சிக்கு சரியன பட்டவை”.  இப்படி பேசிவிட்டு மேடையில் இருந்து வந்தார் புஷ். பார்பரா அவரின் மகள், கண்களில் வழிந்த கண்ணீரை இருக் கரங்களாலும் துடைத்துக் கொண்டார்.

george-bush_farewellபுஷ்ஷின் ஆட்சி பயங்கரமான திவிரவாத தாக்குதலில் தொடங்கி, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் முடிய உள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் தொடுத்த போரினால் முன்பு எப்போதும் இல்லாத அளவு “திவிரவாத அமைப்புகள்” வளர்ந்துள்ளன. உலகில் திவிரவாத சக்திகளால் நிகழும் அட்டுழியங்கள் அப்பாவி மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது என்னது? பண்டிகை விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருப்போர் நிம்மதியாக வீடு  விரும்பும் போது அசம்பாவிதம் எதும் நடந்துவிடுமோ என்ற பயம் தான் முஞ்சுகிறது! 20 வருடங்களுக்கு முன்பு இது போல் இருந்தா? பாக்கிஸ்த்தான் விஷயத்திலும் இந்திய கவனமாக செயல்பட வேண்டும். அவசரத்தில் அமெரிக்கவைப் போல, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, பகையை மேலும் சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்!

நன்றி! புஷ் அவர்களே! திவரவாதத்தின் மீது நீங்கள் தொடுத்த போரின் விளைவை இந்த மனுக்குலம் என்றும் மறக்காது!  விடைப் பெறுகிறேன்!

Advertisements

பின்னூட்டங்கள்»

No comments yet — be the first.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: