jump to navigation

ஒரே ஒரு நிமிடம் மட்டும் ப்ளிஸ்… நவம்பர் 5, 2008

Posted by Personal Web Mate in இணையம், குறு உதவி.
Tags: , , ,
1 comment so far

‘ஒரு நாளில் 1440 நிமிடங்கள் உள்ளது. தினமும் உங்களுக்கு பிடித்த டாப்பிக்கை பற்றி ஒரே ஒரு நிமிடம் மட்டும் எழுத ஒதுக்குங்கள்’ இப்படி கூறுகிறது ‘ஒரு நிமிட பதிவாளர்கள்’  ப்ளாக்கர் வலைப்பூ. இந்த வலைப்பூவில் ஆசிரியரும், வலைப்பதிவை வாசிக்க வருபவர்களும் எழுதுவது 1 நிமிடம் மட்டும். எப்படியென கண்டுபிக்க இங்கே சொடுக்கவும். ஆனால் இந்த மாதிரி பதிவுகள் தமிழில் ஷிட்டாகுமா? வலைப்பூவை பார்துவிட்டு, கருத்துக்களை டானென்று ஒரு நிமிடத்தில் கூறுங்களேன்! (:-)

Advertisements

கூகுள் எப்படி செழிப்பாக இருக்கு? நவம்பர் 1, 2008

Posted by Personal Web Mate in இணையம்.
Tags: , ,
add a comment

என்ன இந்த கேள்வி விநோதமாக இருக்கா? தொடர்ந்து வாசியுங்கள். 1998 ஆம் ஆண்டு 4 ஆம் தேதி  Larry Page மற்றும்  Sergey Brin என்பவர்களால் கூகுள் ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பத்தில் இணையத்தில் உள்ள தகவல்கலை தேடித் தரும் தேடு பொரியாக சேவையை தொடங்கியது கூகுள். மற்ற தேடு பொரி சேவைகளைக் காட்டிலும் சிறப்பான சேவையை வழங்கியதால் நாளுக்கு நாள் மக்கள் வரத்து பெருகியது. நாளடைவில் விளம்பர சேவையைத் தொடங்கி பெரும் பொருள் ஈட்டத் தொடங்கியது. அன்றாடம் தன் இனையப் பக்கத்தில் “தேடு சொல்லுக்கு” சம்மந்தப் பட்ட விளம்பரங்களைக் காட்டியது. இனையத்தில் இப்படி பட்ட விளம்பர முறையினை அறிமுகப் படுத்தியது கூகுள் தான். இம்முறை விளம்பரமும் ஷிட்டானது. எடுத்துக்காட்டுக்கு “திபாவளி பரிசுப் பொருட்கள்” என்று தேடினால், கிடைக்கும் முடிவுகளில், பேஜின் வலப்பக்கம் செங்குத்தாக சில முடிவுகள் தெரியும். இது தான் விளம்பரம். இந்த விள்பரத்தைக் காட்ட விளம்பராதர்கள் கூகுளுக்கு பணம் கட்ட வேண்டும்.

விளம்பர வர்த்தகம் பெருக பெருக, இணையத்தில் ஏற்க்கனவே கொடிக் கட்டி பறக்கும் சில இணையதளங்களை கோடிக் கணக்கில் வாங்கியது. வெறும் தேடு பொரிகள் பக்கத்தில் மட்டும் விளம்பரத்தைக் காட்டாமல், புதிதாக வாங்கிய தளங்களிலும் விளம்பரங்களை காட்டியது.

கூகுள் நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படை கரணங்களில் ஒன்று: முடிந்த அளவு அனைத்தையும் இலவசமாக வழங்கி போட்டியாளர்களின் வயிற்றில் புளியைக் கறைப்பது! கூகுள் நிறுவனமும் நிறைய பொது சேவைகளில் கனிசமான தொகையை செலவழிக்கிறது. உலகெங்கும் அண்ணன் கூகுளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கூகுளின் அவியாத குறிக்கோள்: உலகேங்கும் உள்ள தகவல்களை ஒன்றாக தொகுத்து கூகுளில் போடுவது. இதனை எடுத்துக்காட்டுவதற்கு ஓர் உதாரணம். ஏப்பரல் 6, 1912 ஆம் ஆண்டு வெளி வந்த ‘The Evenging Independent’ நாளிதழை ஸ்க்கேன் செய்து போட்டு இருக்கிறார்களே பார்க்கனும்!

 கூகுள் நியூஸ் ஆர்ச்சிவில் இருந்து எடுக்கப் பட்ட படம்

கூகுள் நியூஸ் ஆர்ச்சிவில் இருந்து எடுக்கப் பட்ட படம்

சிகப்பு வட்டத்தைக் பார்க்கவும். முழு செய்தி தாளும் ஸ்கேன் செய்யப் பட்டுள்ளதது. இப்படி உலகத்துல இருக்குற எல்லா பேப்பருல இருக்குற செய்திகளை தொகுத்து வழங்க போகிறதாம் கூகுள்! ஆடேங்கப்பா?

இணையத்தில் சூரையாடப்படும் தனி நபர் விவரங்கள் ஒக்ரோபர் 26, 2008

Posted by Personal Web Mate in இணையம், குறு உதவி.
Tags: ,
add a comment

Privacy

இன்றைய இளம் தலைமுறையினர், பெரும் புள்ளிகள் போல வாழ ஆசைப்படுகின்றனர். இளசுகளைக் கவரும் வகையில், இனையப் பயன்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, 24 மணி நேரமும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உலகிற்கு காட்ட, கேமிரா மூலம் தங்களை ஒளிப்பரப்பு செய்ய நிறைய தளங்கள் உள்ளன. இது ஏதோ நம்புவதற்கு கடினமாகத் தோன்றலாம், ஆனால் முற்றிலும் உண்மை. இளசுகளே பெரும்பாலும் இணையத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

இணையத்தில் நடக்கும் செயல்கள், இந்த தலைமுறையில் தான் முதன் முதலில் நடக்கிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில், கல்லூரிகளில் பிரிந்த நண்பர்கள், ஒன்று கூடுவது என்பது அசாதர்னமான செயல், ஆனால் இப்போதோ, இது எளிய செயல். இதற்கு காரணம்ஈ வளர்ந்து வரும் சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களே. செய்தி தாள்களிலும், பிற ஊடகங்களிலும் இது போன்ற தளங்களில் நடக்கும் குற்றங்களை பற்றி எழுதிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த குற்றங்கள் எவ்வாறு தடக்கின்றன?

சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களைப் பயன்படுத்துவோர், தங்களுக்கு மிகவும் சொந்தமான தகவல்களை வெளியிடுகின்றனர். இணையத்தில் உலாவ வரும் எவரும் இந்த தகவல்களை பார்க்கலாம். இந்த தனி நபர் தகவல்கள் தவறான கைகளுக்கு கிடைக்கும்போதுதான் பிரச்சனையே. கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கலை வைத்து ஆள் மாறாட்டம் செய்வது, தனிப்பட்ட நபரின் தகவல்கலை சேகரித்து விற்றுவிடுவது, தகவல்களை வேறு தளங்களில் இடுவது போன்றவை நடக்கிறது. எனவே இணையத்தில் சொந்த தகவல்களை வெளியிடும் போது கவனம் தேவை. சொந்த புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.