jump to navigation

“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ் ஜனவரி 19, 2009

Posted by Personal Web Mate in உலகம், நடப்பு.
Tags: , ,
add a comment

George Bush at Farewellஅமெரிக்கர்கள் ஜார்ஜ் புஸ்ஸை “புஸ்” செய்யத் தயாராகும் நேரத்தில், புஷ் ஒரு சரித்திர அறிக்கை வெளியிட்டுள்ளார். அது அவர் கூறியிருப்பது, தன்னுடைய அனுகுமுறைகள் பிரபலமாக பேசப்படாவிட்டாலும், நாட்டுக்கு தன்னுடைய அனுகுமுறைகளால் வந்திருப்பது நல்லது தானாம். இதை அவர் இப்படி கூறுகிறார், “அமெரிக்க கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் எந்த திவிரவாத தாக்குதலும் இல்லாமல் இருக்கிறது”. தன்னுடைய பிரிவு உபச்சார விழாவில் செப்டம்பர் 9/11 திவரவாத தாக்குதலை நினைவுப்படுத்தி பேசிய புஷ், வருடங்கள் போகப் போக, அமெரிக்கர்கள் 9/ 11 தாக்குதலுக்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால் நான் இன்னமும் திரும்பவில்லை என தன்னுடைய உணர்வுகளை கொட்டி தீர்த்துள்ளார்.

புஷ் பற்றி அடுத்து ‘நச்’ தகவல், முன்னால் அமெரிக்க பிரதமர், ஜார்ஜ் நிக்சனை அடுத்து,  அதிக அதிருப்தியும், அங்கிகாரமும் பெறாதவர் என்ற பட்டத்துடன் வெளியேறுகிறார்.  “நிங்கள் நான் எடுத்திருக்கும் தீர்மானங்களை ஏற்க்காமல் இருக்கலாம், ஆனால் நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளர்.  தனக்கு  கொடுக்கப்பட்டிருந்த 13 நிமிடங்களை நன்றாக பயன்படுத்தி தன் செயல்களுக்கு சாக்கு சொல்லப் பார்திருக்கிறார். இனி புஷ்ஷின் அடுத்த பேச்சு புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாளை பதவியேற்ப்பு விழாவில்.  “எனக்கு முன் பதவியில் இருந்த அனைவரையும் போல எனக்கும் சில காரியங்கள் சரியாக நடக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இப்போது காரியங்களை வித்தியாசமாக செய்வேன். நான் என்ன செய்திருக்கிறேனோ அது என்னுடைய மனசாட்சிக்கு சரியன பட்டவை”.  இப்படி பேசிவிட்டு மேடையில் இருந்து வந்தார் புஷ். பார்பரா அவரின் மகள், கண்களில் வழிந்த கண்ணீரை இருக் கரங்களாலும் துடைத்துக் கொண்டார்.

george-bush_farewellபுஷ்ஷின் ஆட்சி பயங்கரமான திவிரவாத தாக்குதலில் தொடங்கி, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் முடிய உள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் தொடுத்த போரினால் முன்பு எப்போதும் இல்லாத அளவு “திவிரவாத அமைப்புகள்” வளர்ந்துள்ளன. உலகில் திவிரவாத சக்திகளால் நிகழும் அட்டுழியங்கள் அப்பாவி மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது என்னது? பண்டிகை விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருப்போர் நிம்மதியாக வீடு  விரும்பும் போது அசம்பாவிதம் எதும் நடந்துவிடுமோ என்ற பயம் தான் முஞ்சுகிறது! 20 வருடங்களுக்கு முன்பு இது போல் இருந்தா? பாக்கிஸ்த்தான் விஷயத்திலும் இந்திய கவனமாக செயல்பட வேண்டும். அவசரத்தில் அமெரிக்கவைப் போல, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, பகையை மேலும் சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்!

நன்றி! புஷ் அவர்களே! திவரவாதத்தின் மீது நீங்கள் தொடுத்த போரின் விளைவை இந்த மனுக்குலம் என்றும் மறக்காது!  விடைப் பெறுகிறேன்!

Advertisements

பிறரைக் கொல்லும் எச்.ஐ.வி விஷமிகள் நவம்பர் 6, 2008

Posted by Personal Web Mate in உலகம், நடப்பு, விவாதம்.
Tags: , , , ,
add a comment

எச்.ஐ.வி வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்போர் மற்றவர்களுடன் உடல் உறவு வைத்து கொள்ளும் போது கவனம் தேவை. ஏனேனில் பாதுகாப்பற்ற உடலுறவின் போது எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து, பாதிக்கப்படாதவருக்கு எச்.ஐ.வி பரவ வைப்புகள் மிக மிக அதிகம். அப்படி உடலுறுவுக்கு மற்றவர்களை அழைக்கும் போது, தான் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட விபரத்தை கூறவில்லையன்றால் அந்த நபர் மீது  கொலைக் குற்ற வழக்கு  பதிவு செய்யப்படும். இந்த முறையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்போர் பிறருக்கு வேண்டுமென்றே  எச்.ஐ.வியை பரப்புவதை தடை செய்யலாம். இப்படி முடிவேடுத்திருக்கிறது கன்னடா.

முதன் முறையாக முறையாக இப்படிப்பட்ட வழுக்கு ஒன்று கன்னடா நாட்டு நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் வந்தது. அதில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் பிறருக்கு எச்.ஐ.வி கிருமியை பரப்ப வேண்டி பல இளம் பெண்களை வழுக்கட்டாயமாக செக்ஸில் ஈடுபடுத்தியது நிருப்பிக்கப் பட்டது. வழக்கு முடிவில் கொலைக் குற்றம் அந்த நபர் மேல் சுமத்தப்பட்டது. வழக்கில் சாட்சி சொல்ல வந்த ஒரு இளம் பெண் கூறுகையில், “போதைப் பொருட்கள் கிடைக்காதா என்று பார்த்து கொண்டிருந்தேன். அவன் (குற்றம் சுமத்தப்பட்டவர்) போதைப் பொருட்களை தருவதாக கூறி என்ளை அழைத்து சென்றான். என்னை கற்பழித்தான். அவனுக்கு அந்த கொடிய நோய் இருப்பதாக என்னிடம் கூறவேயில்லை. இந்த சம்பவம் நடக்கும் போது என் வயது பன்னிரண்டு.” இப்படி கூறி முடித்ததும் தன்னையும் மீறி பிறிட்டு அழுதார்.

இப்படி எயிட்ஸை பரப்புவோருக்கு தண்டனை வழங்கி என்ன பயன்? பாதிக்கப்பட்டடோர் குணமடைந்து விடுவாரா என்ன? தண்டனை வழங்குவதால் எச்.ஐ.வி கிருமி செய்ய வேண்டிய வேலையை சட்டம் சற்று முன்கூட்டி செய்கிறது.

அந்த செயல்: கொல்வது!

இப்படியும் சில விஷமிகள் இருக்க தான் செய்கின்றனர். இதற்கு என்ன தான் தீர்வு? இப்படி பாதிக்கப்பட்வர்கள் மனநிலை எப்படி இருக்கும்? 

எயிட்ஸ், பாதிக்ப்பட்டோரை கொல்கிறது. ஆனால் எயிட்ஸ் பரப்பிகள் மற்றவர்களை கொல்கிறார்கள். சட்டம் தன் வேலையை செய்கிறது. மற்றவர்களை கொல்லுவோரை தண்டிக்கிறது. இப்படிப்பட்ட சட்டம்  இந்தியாவில் வரப்போவது எப்போது?

முடிந்தது இன வேறுப்பாட்டு பிரச்சனை நவம்பர் 6, 2008

Posted by Personal Web Mate in உலகம், நடப்பு.
Tags: , ,
add a comment

வாழ்த்துகள் ஓபாமா! அமெரிக்காவின் நாற்பத்தி நான்காவது அதிபராக ஓபாமா தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளார் பாரக் ஓபாமா. ‘ஆப்பிரிக்க அமெரிக்கரால் அமெரிக்க பிரதமர் ஆக முடியுமா?’ என்ற கேள்வி தவிடு பொடியாகி விட்டது. இனி, புதிய கருப்பு அதிபரைப் பற்றி எடுத்த கேள்வி, “தேர்தல் வாக்குரிதிகளைக் காப்பாற்றுவாரா?” என்பது தான். இந்த கேள்விக்கான பதில், ஜனவரி 2009 யில் ஓபாமா பதவி ஏற்ற பிறகு தான் தெரியும்.

nihr வலைப்பூவின் கருத்து கணிப்பு முடிவுகளும், தேர்தல் முடிகளும் ஒன்றாக உள்ளது. இரண்டலும் ஓபாமாவிற்கு தான் வெற்றி! 60 சதவிதத்தினர் ‘ஓபாமா தான் ஜெயிப்பார்’ என கருத்து தெரிவித்திருந்தனர். சபாஷ்!