jump to navigation

ஆறு மனமே ஆறு! நவம்பர் 6, 2008

Posted by Personal Web Mate in குறு உதவி, விவாதம்.
Tags: , , , ,
add a comment

happiness“ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பொன்னான பாடல் வரிகள் ஞாபகம் வந்துவிட்டதா? இங்கு நான் கூறப் போகும் விஷயத்திலும் ஆறு வருகிறது. உலகம் எவ்வளவோ மாறிவிட்டது என்கிறோம். ஆனால் அடிப்படை மனிதம் அப்படியே தான் இருக்கிறது.  ரோம தத்துவ ஞானி சிசரோ, மனிதர்கள் செய்யும் ஆறு தவறுகளை புட்டுபுட்டு வைக்கிறார். இதை அவர் எழுதி வருடங்கள் இரண்டாயிரம் ஆனாலும், இன்னமும் இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு பொருந்துகிறது.

தவறு ஒன்று: வாழ்க்கையில் முன்னேற மற்றவர்பளை மிதித்து பின்னாக தள்ளினால் தான் உண்டு என்ற தவறான எண்ணம்.

தவறு இரண்டு: மாற்ற திருத்த முடியாத காரியத்தைப் பற்றி சதா கவலைப்படுவது.

தவறு  முன்று: செய்யாமல் விட்ட ஒரு காரியத்தை, சாதிக்கவே முடியாது எனக் கூறுவது.

தவறு நான்கு: அற்ப்ப விஷயங்களை  தள்ளி ஒதுக்க இயலாமை.

தவறு  ஐந்து: மனத் தெளிவு மற்றும் வளர்ச்சியை புறக்கணிப்பது, வாசித்து கற்றுக் கொள்வதை பழக்கமாக வைத்து கொள்ளாமலிருப்து.

தவறு ஆறு: மற்றவர்களை நாம் நம்புவது மற்றும் வாழ்வது  போல் மாற்ற நினைப்பது.

எவ்வளவு உண்மை! இதில் சொல்லப்பட்டிருக்கும் தவறுகளை தவிர்த்தாலே உலகம் வாழுவதற்க்கு மிக உகந்தது ஆகிவிடும் இல்லையா? என்ன சொல்கிறீர்கள்?

Advertisements

ஒரே ஒரு நிமிடம் மட்டும் ப்ளிஸ்… நவம்பர் 5, 2008

Posted by Personal Web Mate in இணையம், குறு உதவி.
Tags: , , ,
1 comment so far

‘ஒரு நாளில் 1440 நிமிடங்கள் உள்ளது. தினமும் உங்களுக்கு பிடித்த டாப்பிக்கை பற்றி ஒரே ஒரு நிமிடம் மட்டும் எழுத ஒதுக்குங்கள்’ இப்படி கூறுகிறது ‘ஒரு நிமிட பதிவாளர்கள்’  ப்ளாக்கர் வலைப்பூ. இந்த வலைப்பூவில் ஆசிரியரும், வலைப்பதிவை வாசிக்க வருபவர்களும் எழுதுவது 1 நிமிடம் மட்டும். எப்படியென கண்டுபிக்க இங்கே சொடுக்கவும். ஆனால் இந்த மாதிரி பதிவுகள் தமிழில் ஷிட்டாகுமா? வலைப்பூவை பார்துவிட்டு, கருத்துக்களை டானென்று ஒரு நிமிடத்தில் கூறுங்களேன்! (:-)

இணையத்தில் சூரையாடப்படும் தனி நபர் விவரங்கள் ஒக்ரோபர் 26, 2008

Posted by Personal Web Mate in இணையம், குறு உதவி.
Tags: ,
add a comment

Privacy

இன்றைய இளம் தலைமுறையினர், பெரும் புள்ளிகள் போல வாழ ஆசைப்படுகின்றனர். இளசுகளைக் கவரும் வகையில், இனையப் பயன்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, 24 மணி நேரமும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உலகிற்கு காட்ட, கேமிரா மூலம் தங்களை ஒளிப்பரப்பு செய்ய நிறைய தளங்கள் உள்ளன. இது ஏதோ நம்புவதற்கு கடினமாகத் தோன்றலாம், ஆனால் முற்றிலும் உண்மை. இளசுகளே பெரும்பாலும் இணையத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

இணையத்தில் நடக்கும் செயல்கள், இந்த தலைமுறையில் தான் முதன் முதலில் நடக்கிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில், கல்லூரிகளில் பிரிந்த நண்பர்கள், ஒன்று கூடுவது என்பது அசாதர்னமான செயல், ஆனால் இப்போதோ, இது எளிய செயல். இதற்கு காரணம்ஈ வளர்ந்து வரும் சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களே. செய்தி தாள்களிலும், பிற ஊடகங்களிலும் இது போன்ற தளங்களில் நடக்கும் குற்றங்களை பற்றி எழுதிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த குற்றங்கள் எவ்வாறு தடக்கின்றன?

சோஷியல் நெட்வேர்க்கிங் தளங்களைப் பயன்படுத்துவோர், தங்களுக்கு மிகவும் சொந்தமான தகவல்களை வெளியிடுகின்றனர். இணையத்தில் உலாவ வரும் எவரும் இந்த தகவல்களை பார்க்கலாம். இந்த தனி நபர் தகவல்கள் தவறான கைகளுக்கு கிடைக்கும்போதுதான் பிரச்சனையே. கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கலை வைத்து ஆள் மாறாட்டம் செய்வது, தனிப்பட்ட நபரின் தகவல்கலை சேகரித்து விற்றுவிடுவது, தகவல்களை வேறு தளங்களில் இடுவது போன்றவை நடக்கிறது. எனவே இணையத்தில் சொந்த தகவல்களை வெளியிடும் போது கவனம் தேவை. சொந்த புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.