jump to navigation

அமெரிக்க பிரதமர், தோலின் நிறத்தால் தேர்வு செய்யப்படுவாரா? நவம்பர் 4, 2008

Posted by Personal Web Mate in இனம், உலகம், நடப்பு, விவாதம்.
Tags: , , ,
1 comment so far

முழு உலகமும் அமெரிக்க பிரதமர் தோ்தலை ஆவலுடன் கவனித்து கெண்டிருக்கிறது. வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும்  எந்த அடிப்படையில் அமையப் போகிறது என்பது கணிக்கப்பட்டுவிட்டது. ஆனால் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை அறிய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். இப்போது உள்ள சூழலில், பிரபல ஓட்டுகள் எண்ணிக்கை கணக்கில் டெமாக்ரட்டிக் கட்சி வேட்பாளர்  Barack Obama தான் போட்டயாளர் John Macain  விட அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலைப் பற்றி ஒரு ஸ்வாரஸியமான செய்தி. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளார்களான Barack Obama மற்றும் John McCain- வும்  அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள். பராக் ஒபாமாவிற்க்கு Halwali, ஜான் மெக்கேயினுக்கு Panama.
இப்போதைக்கு உள்ள பிரச்சனையே கருப்பா? வெள்ளையா? என்பதே! அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆப்ரிக்க அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டி இடுகிறார். அமெரிக்க வரலாற்றில் வெள்ளை, கருப்பர் இனப் பிரச்சனைகள் ஏராலம் உண்டு. இனம் வாரியாக ஒரு பகுதி மக்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுவதை எதிர்த்தவர்கள் பலர். அதில் முன்னால் அமெரிக்க அதிபர் அபிரகாம் லிங்கன் பங்கு இன்றியமையாதது. இது 21ஆம் நூற்றாண்டடு இன்னமும் இனப்பிரச்சனை இருந்து வருகிறது. வெள்ளையர்கள் ஓபாமாவின் இனத்தை கருத்தில் கொண்டால், ஓபாமா தோல்வியை தழுவுவாரா?  இதற்க்கு ஓபாமாவின் பதில், ”அப்படி நினைத்திருந்தால் என் கட்சி என்னை அதிபர் பதவி போட்டிக்கு வேட்பாளராக நிறுத்தியிருக்குமா? அமெரிக்க மாறிவிட்டது,” என நம்பிக்கை தெரித்துள்ளார். எந்த அளிவற்கு என்பது இந்த வார முடிவிற்குள் தெரிந்துவிடும்.

எடுத்த பெரிய கேள்வி, ‘எப்படி ஓபாமா பிரபால ஓட்டுகள் எண்ணிக்கையில் ஜான் மெக்கேயினை வென்றார்? அதிக பிரபல ஓட்டுக்கைளைப் பெற்றதால் தோ்தலில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளதா?’ இதற்க்கும் ”இல்லை” என்று, காரணத்துடன் பதில் வருகிறது. ஓபாமாவின் வெற்றி  பிராட்லி எப்பெக்ட் (BRADELY EFFECT) – ஆல்  பாதிக்க கூடும் என்கிறார்கள். 1982-யில் கலிப்பேர்னியா மாகாண கவர்னர் தேர்தலுக்கு டாம் பிரட்லி (Tom Bradely) என்ற ஆப்ரிக்க அமெரிக்கர்,  ஜியார்ஜ் டியும்ஜன் (George Deukmejian) என்ற வெள்ளையரை எதிர்த்து போட்டி இட்டார். பிரபரல ஓட்டுக்களில் பிராட்லி தான் முன்னியில் இருத்தார். ஆனால் தேர்தல் முடியுகளே முற்றும் முறனாக வந்தது. காரணம்? சில வெள்ளை அமெரிக்க வாக்காளர்கள் உண்மையிலே பிராட்லிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும், ‘அவருக்கு தான் எங்கள் ஓட்டு’ எனக் கூறியிருப்பது பிறகு தான் தெரிய வந்தது. இதை தான் பிராட்லி எப்பெக்ட். ஓபாமாவுக்கு கண்டிப்பாக 6% – 12% ஓட்டுக்களை பிராட்லி எப்பெக்ட்டால் ஈழக்க கூடும் என கணிக்கிறார்கள். இப்படி இழ்ந்தால் ஜானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதற்க்கு ஓபாமாவின் மனைவி, மைக்கேல் ஓபாமாவின் பதில், ஏற்கனவே வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு ஜெயித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களை எடுத்துக்காட்டுகிறார். ஆனால் அவர் கூறிப்பிட்டுள் வேட்பாளர்கள், மிக குறைந்த ஓட்டு வித்தியசத்திலேயே வெற்றுள்ளனர் என தெரிய வருகிறது. எது எப்படியோ ஓபாமா எதிர்க்கொள் வேண்டியது மற்ற முடடியாத தன் தோலின் நிறமும், இனக் கொள்கையில் இருந்து மாற விரும்பாத வெள்ளையர்களிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதும் தான்! அமெரிக்க தேர்தல் இன்று நவம்பர் நான்காம் தேதி. ஆனால் இங்கு nihrயில் இப்பொழுதே அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என கூறுங்கள் பார்ப்போம்!

கருத்து கணிப்பு முடிவடைந்தது. முடிவுகள் மேலே

கருத்து கணிப்பு முடிவடைந்தது. முடிவுகள் மேலே

Advertisements

இலங்கை தமிழர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஒக்ரோபர் 31, 2008

Posted by Personal Web Mate in இனம், உலகம், நடப்பு, விவாதம்.
Tags: , ,
5 comments

”இலங்கை தமிழர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை” – இது தான் தமிழ்ர் அல்லாத பிற இந்திய மாநிலத்தவர் கூறுவது! வட மாநிலங்களில் பிரபல செய்தி தொலைக் காட்சி ஊடகங்களும், இலங்கையில் நடக்கும் தமிழ் இனக் கொலைப் பற்றி செய்திகளை தொகுத்து வழங்குவதில்லை. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப் படுவதை எதிர்த்து, தமிழகத்தில் மனிதச் சங்கிலி ஏற்படுத்தி, ஏதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், இச் செய்தி வட மாநில ஊடகங்களில் துளிக் கூட வரவில்லை. என்னடா இது? என யோசித்து கொண்டிருந்தேன்.

கடந்த வாரத்தில் என நினைக்கிறேன். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். நாளிதழின் முகப்பு பக்கம், ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டிருந்தது. அது –

இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் ஈடுப்பட வேண்டுமா? 

முடிவுகள்: 74 % கூடாது என்றும், வெறும் 23 % செய்ய வேண்டும் என்றும், 3%  தெரியதென்றும் இருந்தன.

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைக் கானும் இந்தியா என்பதா? என்னற்ற  வலைப் பதிவாளர்களும் இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப் படுவதை எதிர்த்து தங்கள் குரல்களை ஓலித்துக் கொண்டிருக்க, இவர்கள் குறைந்த பட்சம், வட நாட்டவர், தென் நாட்டவர் என்ற பேதங்களை மறந்து,  தங்கள் ஆதரவையாவது தெரியப்படுத்தலாம் இல்லையா? சரி இதோ nihr வலைப்பூவில் ஓர் கருத்துக் கணிப்பு: