jump to navigation

அளவைக் குறைத்து விலையை உயர்த்தும் நிறுவனங்கள்! திசெம்பர் 1, 2008

Posted by Personal Web Mate in நடப்பு, விவாதம்.
Tags: ,
2 comments

பொதுவாக விலை உயர்வு இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் காய்கறிகள் உயரும் போது மட்டும் தான் மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும். ஆனால் அமைதியாக சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் அளவைக் குறைத்து விலையை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுனிலிவர் நிறுவனத்தின் “ப்யர்ஸ்” (Pears) குளியல் சோப்யை வாங்கினேன். சில வாரங்களுக்கு முன்பு வரை எழுபத்தி ஐந்து கிராம் ப்யர்ஸ் சோப்பு வெறும் ரூ. 23  தான். ஆனால் இப்போதைய விலை ரூ.25, ஆனால் எடை எழுபத்தி ஒன்று மட்டுமே. நான்கு கிராம் குறைவு ஆனால் விலை மட்டும் இரண்டு ரூபாய் கூட. இதே போன்று பிரபலமாக விற்பனையாகும் இரண்டு ரூபாய் சர்ப் எக்சலின் (Surf Excel) அளவு குறைக்ப்பட்டுள்ளது. பதினேழு கிராமிலிருந்து பதினான்கு கிராமிற்க்கு குறைக்கப் பட்டுள்ளது. ஆனால் விலை அதே தான்.

இப்படி அமைதியாக மக்களை “ஏக்கிறார்கள்”. நாமும் இதைப் பற்றி யோசிப்பது கூட இல்லையே! எதற்க்காக இதை இங்கு கூற விரும்புகிறேனேன்றால், வளரும் நாடுகளான மூன்றாம் தர நாடுகளில் பெரும் நிறுவனங்கள் விலைக் குறைத்து பொருளின் தரத்தையும் குறைத்து விடுகின்றனர். சில நேரங்களில் இது போன்ற மலிவு பொருட்களால் தீமைகள் தான் வருகிறது. இதற்க்கு தக்க உதாரணம், சில வருடங்களுக்கு முன்பு கோல நிறுவன பானத்தில் புச்சி மருந்நு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்து.

அளவைக் குறைத்து விலை ஏற்று நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டாமா? ஒவ்வொரு சோப்பிலும் நான்கு கிராமை குறைத்து இரண்டு ரூபாயை ஏற்றினால் அந்த நிறுவனத்திற்க்கு எவ்வளவு லாபம்? ஆனால் மக்களுக்கு இழப்பு தானே?

Advertisements

செல்போனை துலைத்த கதை நவம்பர் 25, 2008

Posted by Personal Web Mate in நடப்பு.
Tags: , ,
1 comment so far

 apple-iphone“அரசியல்ல இதேல்லாம் சகஜம்ப்பா” என்ற சினிமா வசனம் பலருக்கும் தெரியும். ஆனால் அநியாயத்திற்க்கு சில விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கிறது. சில வரங்களுக்கு முன்பு பணியிடத்தில் செல்போனை துலைத்தேன். பொருளை இழந்த துயரத்தைவிட ஒரு பெரும் துயரம் காத்திருந்தது. செல்லை எடுத்தவன் செல்போனில் உள்ள சிம் கார்டை கழற்றி எறிந்து விடுவான். அது யார் கைக்கு கிடைக்குமென்று யார்க்கு தெரியும்? எடுத்தவன் துஸ்பிரயோகம் செய்தால் ‘மாட்டுவது’ நானாக தான் இருப்பேன் இல்லையா? பிரச்சனை வராமல் இருக்க காவல் நிலையத்திற்க்கு சென்று FIR பதிவு செய்துவிட்டு வந்தேன். காவலர்களிடம் இருந்து அந்த கால் பக்க காகிதத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அடுத்து எனது செல்போன் நிறுவன வாடிக்கையாளர் மையத்திற்க்கு அழைத்து, கார்டை துலைத்த விபரத்தை கூறினேன். கூறிய உடன் ஒரு மனிதாபிமானத்திற்க்கு “ரொம்ப வருந்துகிறோம்” என்றனர். கார்டையை நிறந்தரமாக நிறுத்த வேண்டுமேன்றேன். அதற்க்கு, அந்த நிறுவன சேவை மையத்திற்க்கு செல்ல வேண்டும் என்றனர். நான் வாசிக்கும் இடத்திலிருந்து அருகிலுள்ள நிறுவன சேவை மையம் சுமார் நூறு கிலோ மீட்டர் துரம். “சரி” என்று போனை துண்டித்தேன். ஒரு வாரத்திற்க்கு பிறகு மீண்டும் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டேன். என்னிடம் பேசிய பெண், உங்கள் எண்ணையும், பெயரையும் கூறுங்கள் என்றார். கூறினேன். அவர் கூறிய பதில் என்னை அதிர வைத்தது. “மன்னிக்கவும். இந்த எண் உங்கள் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. வேறு பெயரில் உள்ளது”  “ஐயோ இதேன்ன கொடுமை?” எதோ ‘கோல்மால்’ நடந்திருப்பது தெரியவந்தது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களை அழைத்தேன். பெயர் மாற்றம் எப்படி நடந்தது என்று கேட்டேன்.

“நிங்கள் என்ன டாக்குமென்டை (ஐ.டி ப்ருப்) சமர்ப்பித்தீர்கள்?” 

“என்னுடைய …”

“மன்னிக்கவும். அது எற்றுக் கொள்ளப் படதக்கதல்ல! கார்டை ஏங்கிருந்து வாங்கினீர்கள்?”

“ஆனால் கார்டை மூன்று மாதங்களாக பயன்படுத்தியிருக்றேன். உங்கள் நிறுவனத்தில் இருந்து மாற்று ஐ.டி சான்று கேட்கவே இல்லையே? ஏன்?”

“கார்டை ஏங்கிருந்து வாங்கினீர்கள்?”

“என்னுடைய …”

உங்கள் கார்டுக்கு தேவையான சான்றில்லாததால் நீங்கள் கார்டை வாங்கிய கடைக்கரர் வேறோருவரவது சான்றை பயன்படுத்திருக்கலாம். அதனால்தான் வேறு பெயரில் உள்ளது”

இதைப்பற்றி நன்றாக கேள்விப்பட்டது போல் கூறினார். என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. சான்று செல்லாதெனில் என்னை அழைத்து கூறாமல், இப்படி செய்யலாமா? வேருயாரவது சான்றை எனக்கு பயன்படுத்தினால், என் சான்றை யாருக்கு பயன்படுத்தி இருப்பார்களே என பீதி கிளம்புகிறது. புது மொபைல் தொடர்ப்பை பெற கடைக்காரரிடம் சான்றை கொடுப்பதற்க்கு பயமா இருக்கு. இதையல்லாம் எப்படி சகஜமா எடுத்துக்கிட்டு தொழில் பன்னுறாங்களோ தெரியல!

பறவைகளைத் தாக்கும் செல்போன் டவர்கள் ஒக்ரோபர் 22, 2008

Posted by Personal Web Mate in நடப்பு.
Tags: , ,
add a comment

birds

செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இது பழைய செய்தி! எண்ணற்ற ஆய்வுகள் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளிவர துவங்கிவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க, விங்ஞானிகள் செல்பேசிகளில் உபயோகப்படுத்தப்படும் “மைக்ரோ வேவ்”கள் பறவைகளை எப்படி பாதிக்கிறது என்பதை கண்டறிய, பறவை முட்டைகளை, சாதார்னமாக செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் அதே அளவு கதிர் வீச்சுக்கு உட்படுத்தினர். ஆய்வு முடிவு? முட்டைகள் அனைத்தும் அவித்தது போல் ஆகிவிட்டது!

பெரும்பாலும் பறவைகளை செல்போன் டவர்களில் அமர்திருப்பதை கானலாம். எனவே கதிர்கள் பறவைகளைத் தாக்ககுடும். இதே நிலை தெடர்ந்தால் பறவைகள் ஒட்டு மெத்தமாக அழியாக்குடிய வாய்ப்பு இருக்கிறது! செல்போன் புரட்சியால் வானில் உல்லாசமாக சுற்றித் திரியும் பறவைகள் பாதிப்புக்குள்ளாகப் போகிறது!