jump to navigation

அளவைக் குறைத்து விலையை உயர்த்தும் நிறுவனங்கள்! திசெம்பர் 1, 2008

Posted by Personal Web Mate in நடப்பு, விவாதம்.
Tags: ,
trackback

பொதுவாக விலை உயர்வு இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் காய்கறிகள் உயரும் போது மட்டும் தான் மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும். ஆனால் அமைதியாக சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் அளவைக் குறைத்து விலையை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுனிலிவர் நிறுவனத்தின் “ப்யர்ஸ்” (Pears) குளியல் சோப்யை வாங்கினேன். சில வாரங்களுக்கு முன்பு வரை எழுபத்தி ஐந்து கிராம் ப்யர்ஸ் சோப்பு வெறும் ரூ. 23  தான். ஆனால் இப்போதைய விலை ரூ.25, ஆனால் எடை எழுபத்தி ஒன்று மட்டுமே. நான்கு கிராம் குறைவு ஆனால் விலை மட்டும் இரண்டு ரூபாய் கூட. இதே போன்று பிரபலமாக விற்பனையாகும் இரண்டு ரூபாய் சர்ப் எக்சலின் (Surf Excel) அளவு குறைக்ப்பட்டுள்ளது. பதினேழு கிராமிலிருந்து பதினான்கு கிராமிற்க்கு குறைக்கப் பட்டுள்ளது. ஆனால் விலை அதே தான்.

இப்படி அமைதியாக மக்களை “ஏக்கிறார்கள்”. நாமும் இதைப் பற்றி யோசிப்பது கூட இல்லையே! எதற்க்காக இதை இங்கு கூற விரும்புகிறேனேன்றால், வளரும் நாடுகளான மூன்றாம் தர நாடுகளில் பெரும் நிறுவனங்கள் விலைக் குறைத்து பொருளின் தரத்தையும் குறைத்து விடுகின்றனர். சில நேரங்களில் இது போன்ற மலிவு பொருட்களால் தீமைகள் தான் வருகிறது. இதற்க்கு தக்க உதாரணம், சில வருடங்களுக்கு முன்பு கோல நிறுவன பானத்தில் புச்சி மருந்நு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்து.

அளவைக் குறைத்து விலை ஏற்று நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டாமா? ஒவ்வொரு சோப்பிலும் நான்கு கிராமை குறைத்து இரண்டு ரூபாயை ஏற்றினால் அந்த நிறுவனத்திற்க்கு எவ்வளவு லாபம்? ஆனால் மக்களுக்கு இழப்பு தானே?

பின்னூட்டங்கள்»

1. dhans - திசெம்பர் 2, 2008

It happens everywhere.
The dosa size in a hotel, where I am taking food regularly has been reduced much, with price increase of 30%!

2. Sathya - திசெம்பர் 30, 2008

வேறு எங்கேயோ கூட படிச்சேன். ஒரு பெரிய பட்டியலே இருந்தது. இதே மாதிரி எடை குறைந்து விலை ஏறிய பொருட்கள்தான்…. :-((


பின்னூட்டமொன்றை இடுக