jump to navigation

பேசு இந்தியா பேசு! தங்கிலீஷ்! ஜனவரி 15, 2009

Posted by Personal Web Mate in நடப்பு, மொழி, விவாதம்.
Tags: , , ,
trackback

languageஷிங்கிலீஷ், பெங்குலீஷ், பஞ்சலீஷ் மற்றும் தமிலீஷ் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். எல்லோரும் தங்கள் தாய்மொழியுடன் ஆங்கிலத்தை சராமரியாக கலந்து பேசுகின்றனர்.

இந்தியர்கள் தங்கள் தாய் மொழியை அடுத்து ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர் என நான் கூறினால் அது மிகப் பெரிய வேடிக்கையாகி விடும்! தாய் மொழியில் பேச வாயேடுத்தாலும் இடைஇடையே தங்களையும் அறியாமல் ஆங்கில வார்த்தைகளை அடுக்கடுக்காய் பேசுகின்றனர்.ஒரு பக்கம், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தாலும், ஆங்கிலம் எப்படி, எங்கேல்லாம், எவர்களிடம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.

இந்தியாவில் சுமால் இரநூறுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மொழி பேசப்பட்டு வருகிறது. இதில் உலகமயமாக்கலால் இடையில் ஆங்கிலம் உலகேங்கும் புதிய கட்டாய மொழியாக புகுத்தப்படுகிறது. தாய் மொழியில் பேசும் போதும் கூட ஆங்கில வார்ததைகள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்வதால், இந்திய மொழிகள் நாளடைவில் மறைய வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. இது பழைய ஐயம்.ஆனால் இப்போது புதிய பிரச்சனை கிளம்பிள்ளது.

இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை (11/01/09) அன்று டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) நாளிதழில் “ஆங்கிலம் கலந்த இந்திய மொழிகள்” பற்றிய ஒரு அதிரடியான செய்திப்பக்கம். அதில் ஆங்கிலத்தால் இந்தியாவில் தற்ப்போது நடக்கின்ற மொழி மாற்றங்கள் பற்றி மிக சிறப்பாக கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. அதின் இரத்தின சுருக்கம் இங்கே. முதலில் ஆங்கிலம் கலந்த ஷிந்தியால் நடப்பது:

பாலிவூட், தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், தெருவில் என ஆங்கில கலப்பை எங்கும்
பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்க்கு சினிமா பாடல்களில் வரும் ஆங்கில வார்தைகள். வானொலிகளில் –  Radio மிர்ச்சி செம hot.

“இந்தி, ஆங்கிலம், தமிழ் – இம்முன்று மொழிகளும் தொடர்ப்புடையன. நிறைய தமிழ் படங்கள் ஷிந்தியை பயன்படுத்துகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் பாலிவூட். ஷிந்தி மக்களை சென்றடையவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றியிருக்கிறது” – ஜி.ஜே.வி பிரசாத், பேரசிரியர் ஆங்கில படிப்பு பிரிவு,  ஜவர்கலால் நேரு பல்கழைக் கழகம்.

சரி! அப்போது தெற்க்கு, வடக்கு மொழி வேறுப்பாட்டை ஷிங்குலீஷ் (ஷிந்தி + ஆங்கிலம்) நீக்கி, பேச்சு வழக்கில் ஆதிக்கம் செலுத்துகிறதா? இந்த கேள்விதான், முதுரா இன்ஷ்டிடுயுட் ஆப் கம்யூனிக்கேஷன் (Mudra Institute of Communication), மும்பையில் நடத்திய உலகளாவிய கருத்தரங்கில் விவாதிக்ப்பட்டது. “ஷிங்குலீஸ் கொஞ்ச காலமாகவே பேசப்பட்டு வருகிறது. முழுதாக ஆங்கிலமோ அல்லது இந்தி தெரியாதவர்கள் தான் அதை அதிகம் பயன்படுத்துகின்றனர் என ஒதுக்கிவிடலாம். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஏகாத்திபத்தியம் நடத்திய காலத்தின் ஆங்கில மொழி ஆதிக்கத்திலிருந்து நம்மை வெளியே இழுத்து, துணை மொழியாக உருவேடுத்து வருகிறது” இப்படி கூறுபவர் ரீட்டா கோத்தாரி , துணை பேராசிரியர், MICA.

முன்னுற்று ஐம்பது மில்லியன் ஷிங்குலீஸ் பேசுபவர்கள், ஆங்கில மொழியை தங்கள் தாய் மொழியாக பேசி வருபவர்களை மிஞ்சி விடுவார்கள் என டேவிட் கிறிஸ்டல், மொழி ஆய்வாளர் கணித்துள்ளார். வளர்த்து வரும் ஷிங்குலீஸ்க்கு என்ன காரணம்?

விளம்பர உலகை எவ்வாறு பாதித்து உள்ளது? முன்னோடி விளம்பர குரு, பாரத் தாபேஸ்கர் கூறுகையில், இந்தியாவில், ஆங்கிலம் மக்களை உசுப்பக் கூடியது. இந்திய மொழிகள் எண்ணங்களை அசைக்க கூடியது என்றார்.

மேலே உள்ளது போல ஷிங்குலிஷ்க்கு வாக்காளத்து வாங்குகின்றனர். சரி இதுபோக ஷிங்குலீஷால் வரும் பாதகங்களை தனியாக ஒரு கட்டுரையாக எழுதி இருந்தனர். ஷிந்தி கலந்த ஆங்கிலத்தை வெளி உலகத்தாரிடம் பேசினால் அவர்களுக்கு புரியப் போவதில்லை. எனவே இப்போதைக்கு பிழைக்க வேண்டுமானால் ஷிந்தி கலக்காத சுத்த ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என முடித்துக் கொண்டனர்.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழி ஷிந்தி என்றாலும், இது தமிழுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் அதிகம்பேர் ஆங்கில வார்ததைகளை, பேசும் போது சராமரியாக போட்டு வேசுவர்கள். தமிழ் வார்த்தைகள் நிறைந்த ஆங்கிலம் (தங்கிலிஷ்) இன்னமும் ஷிங்குலிஷ’ போல புதிய ஆங்கில + ஷிந்தி வார்த்தைகள் அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், தமிழில் ஆங்கில கலப்பு அபயகரமானது. தமிழ் வேறு, ஆங்கிலம் வேறு. இந்த இரண்டு மொழிகளையும் கல்ககாமல் தனித்தனியே பேசுவதே தமிழுக்கு நல்லது. அப்படி செய்தால் பல பல தலைமுறைகளுக்கு தமிழனிடம் தமிழன்  பேசுவதற்க்கு சிதையாமல் தமிழும்,  வெளி உலகில் உள்ள பிற மனித இனத்துடன் பேச ஆங்கிலமும் தமிழனுக்கு தெரியும்.

பின்னூட்டங்கள்»

No comments yet — be the first.

பின்னூட்டமொன்றை இடுக